மது போதையில் அண்ணன் என்று கூட பாராமல் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து தம்பியை காவல் துறையினர் கைது செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் அண்ணன் தலையில் அம்மிக்கல்லை போட்ட தம்பி! மிரள வைக்கும் காரணம்!
புதுச்சேரியில் வில்லியனூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ், அருள்ராஜ் என்பவர்கள் இரட்டை சகோதரர்கள். இருவருக்கும் அதீத மதுப்பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அளவை மீறி மது அருந்தி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நேற்று வழக்கம் போல இருவரும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். வந்தவுடன் இருவரும் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். இறுதியில் இருவரையும் சமாதானம் செய்து ஆனந்தராஜை வீட்டை விட்டு சற்று நேரத்திற்கு வெளியே அனுப்பினர்.
இரவில் ஆனந்த்ராஜ் வீட்டிற்கு திரும்பினார். பலத்த கோபத்தில் இருந்த ஆனந்த்ராஜ் தன் அண்ணன் என்று கூட பார்க்காமல் அருள்ராஜன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவமானது வில்லியனூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. கொலை வழக்கில் ஆனந்த்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.