அண்ணிக்காக அண்ணனை கொன்று வீட்டுக்குள் புதைத்த தம்பி! 6 வருடத்திற்கு பிறகு அம்பலமான அதிர்ச்சி சம்பவம்!

மனைவியுடன் தன் தம்பி கள்ளக்காதல் வைத்துக்கொண்டதை கண்டித்த அண்னனை தம்பி கொலை செய்திருக்கும் சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் சீர்காழி பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள கூழையாரு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் அப்பகுதிக்கு அருகே உள்ள சி. புதுப்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சுமிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். திடீரென்று சவுதி அரேபியாவில் வேலை கிடைத்ததால் முருகதாஸ் இடம்பெயர்ந்தார். சுமிதா தனியாக கடலூர் துறைமுகத்திற்கு அருகே உள்ள சிங்காரதோப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

முருகதாஸிற்கு சுமேர் என்று ஒரு சகோதரர் உள்ளார். அண்ணன் சவுதி அரேபியா சென்ற பிறகு சுமேர், சிங்காரத்தோப்பிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது சுமிதாவுக்கும் சுமேருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர். 

கடந்த 2013-ஆம் ஆண்டில் தன் மைத்துனனின் திருமணத்திற்காக முருகதாஸ் கடலூர் வந்திருந்தார். எதிர்பாராவிதமாக சில நாட்களிலேயே முருகதாஸ் மாயமானார். அவருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. சுமிதாவிடம் விசாரித்தபோது முருகதாஸ் சவுதி சென்று விட்டதாக கூறியுள்ளார்.

முருகதாஸ் மாயமான சில தினங்களிலேயே சுனிதாவும், சுமேரும் மாயமாகினர்.  உறவினர்கள் வலைவீசி தேடி வந்த போதிலும் இவர்கள் கிடைக்கவில்லை. சில மாதங்களில் முருகதாஸின் தாயாரான பவுனம்மாள் சிங்காரத்தோப்பு காவல் நிலையத்தில் தன் மகன் காணவில்லை என்று புகார் அளித்தார். மகனின் பாஸ்போர்ட் என்னிடம் இருக்க அவன் எவ்வாறு சவுதி அரேபியா சென்றிருக்க இயலும் என்று வினவியுள்ளார்.

மேலும் தன் இரண்டாவது மகனும்,சுமிதாவும் மாயமாகியுள்ளது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியிருந்தார். சிங்காரதோப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். தனி குழு ஒன்றை அமைத்து தேடியதில் சுனிதாவும், சுமேரும் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் வசித்து வருவது கண்டறியப்பட்டது. தனிக்குழு கேரளா சென்று அவர்களை கடலூர் அழைத்து வந்தனர். 

சுமேரிடம் விசாரணை நடத்தியதில், "என் அண்ணன் சவுதி அரேபியா சென்ற பிறகு, எனக்கும் என் அண்ணி சுமதிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, பின்னர் கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் பலமுறை உல்லாசம் அனுபவித்தோம். 2013-ஆம் ஆண்டு என் அண்ணன் சவுதி அரேபியாவிலிருந்து வந்த சில நாட்களிலேயே எங்கள் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தார்.

மேலும் எங்களை வன்மையாக கண்டித்தார். ஆத்திரமடைந்த நான் என் அண்ணனை கொலை செய்தேன். பின்னர் அவர் உடலை வீட்டிலேயே குழி தோண்டிப் புதைத்துவிட்டேன்" என்று கூறினார்.இன்று காலை வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் முருகதாஸின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.