மனைவி வாங்கிய 149 ஓட்டு..! வெற்றி வாகை சூடிய கொழுந்தன்..! நடுத்தெருவுக்கு வந்த கணவன்..! திருப்பூர் பரிதாபம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடைய பாளையம் ஊரக உள்ளாட்சி தலைவருக்கு போட்டியிட்டனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில் உள்ளது சடையபாளையம் கிராம ஊராட்சி. 22 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் சுமார் வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டியிட்ட 6 பேர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தை சார்ந்த பெரியசாமியின் அவரது மனைவி லக்ஷ்மியும் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரனும் இந்த ஊராட்சியில் போட்டியிட்டனர். இதனால் இந்த ஊராட்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது.

இந்த ஊராட்சியில் மொத்தம் பதிவான ஆயிரத்து 5488 வாக்குகளில் பெரியசாமி அவர்கள் 1986 வாக்குகளும், அவரது மனைவி லட்சுமி 149 வாக்குகளும் பெற்றனர். பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் 2147 வாக்குகள் பெற்று இந்த ஊராட்சியில் வெற்றி பெற்றார். ஒருவேளை பெரியசாமியின் மனைவி தேர்தலில் போட்டியிடாமல் இருந்திருந்தால் பெரியசாமி வெற்றியின் அருகில் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

ஊராட்சி தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈஸ்வரிடம் தனது வெற்றி குறித்து கேட்டபோது, அவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது தன்னுடைய அண்ணன் மக்களை மதிக்க மாட்டார் என்றும் அவருடைய ஆணவத்திற்கு கிடைத்த பரிசுதான் இந்த தேர்தல் முடிவு என்று கூறினார் அவர் பெற்ற 1986 வாக்குகள் கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துப் பெற்றவை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் என்னால் முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்வேன் மேலும் அவர்களுடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவேன் என்றும் தேர்தலில் வெற்றிபெற்ற ஈஸ்வரன் கூறினார்