அது நல்ல பழக்கம் இல்ல! தங்கையை கண்டித்த அக்கா! ஆத்திரத்தில் ரகசிய காதலன் அரங்கேற்றிய பயங்கரம்!

தங்கையின் கள்ளக்காதலனை கண்டித்தற்காக பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ஆதம்பாக்கம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள ஏரிக்கரை பகுதியில் விவேகானந்தன் என்பவர் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய வயது 28. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த மோகனப்பிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  மோகனப்பிரியாவின் வயது 24. இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார்.

ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையில் கார் ஓட்டுநராக லோகேஷ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும், மோகனப்பிரியாவின் சகோதரிக்கும் சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனை மோகனப்பிரியா கண்டுபிடித்துள்ளார். பின்னர் தன் தங்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் பயந்துபோன மோகனப்பிரியாவின் தங்கை லோகேஷை காண்பதற்கு செல்லவில்லை. இந்த தகவலை அறிந்த லோகேஷ் மோகனப்பிரியா மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

மோகனப்ரியா சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது லோகேஷ் ஆசிட் வீசியுள்ளார். வீசியவுடன் லோகேஷ் தப்பித்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து தர்மஅடி அடித்துள்ளனர். பின்னர் அவரை ஆதம்பாக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லோகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.