7 வயது மூத்தவருடன் காதல்! பிறகு கல்யாணம்! 25 வயது மதுபாலாவுக்கு தற்போது ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

காதலித்து திருமணம் செய்த இளம்பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அய்யம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் கபிஸ்தலம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள தேவனோடத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய வயது 32. இவர் தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் பட்டீஸ்வரத்திற்கு அருகேயுள்ள சோழன் மாளிகையை சேர்ந்த மதுபாலா என்ற 25 பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையுள்ளது.

இத்தம்பதியினர் அய்யம்பேட்டை அருகே வசித்து வந்தனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வழக்கம்போல இத்தம்பதியினருக்குள் தகராறுகள் ஏற்பட்டன. அப்போது சண்முகவேல் மதுபாலாவை கடுமையாக திட்டியுள்ளார். மனமுடைந்த மதுபாலா தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மதுபாலாவை  மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சம்பவம் அறிந்து அய்யம்பேட்டை காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மதுபாலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மதுபாலாவின் தந்தை தன்னுடைய மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.