உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண்! சென்னை பரபரப்பு! பகீர் காரணம்!

சென்னையில் இளம்பெண் ஒருவர் அதிகாலை நேரத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளது அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்பு அவர் போலிஸாரால் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னையிலுள்ள ராயப்பேட்டையில் போலீஸார் எப்போதும் போல ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதிகாலை நேரத்திலும் அங்கு மக்கள் கூட்டம் ஆங்காங்கே காணப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி என்ற இடம் அமைந்துள்ளது.

அந்த இடத்தில் இளம்பெண் ஒருவர் அதிகாலை நேரத்தில் உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக நடுரோட்டில் நடந்து சென்றிருக்கிறார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் உடனே இந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை போலீசாரிடம் கூறியிருக்கின்றனர். 

உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டு கேள்விகளை கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண்ணுக்கு தெலுங்கு தான் தெரியும் என்பதால் அவளால் சரியாக பதிலளிக்க இயலவில்லை . மேலும் அந்தப் பெண் பார்ப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் தோன்றி இருக்கிறது . 

போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது அவருக்கு தீவிரமான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் கதறி அழுதிருக்கிறார். உடனே போலீசார் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமில்லாமல் இந்த பெண்ணின் இந்த நிலைக்கு யார் காரணம் என்றும் இந்த பெண் எப்படி அந்த இடத்திற்கு வந்தார் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அதுமட்டுமில்லாமல் அந்த பெண் நடந்து வந்த அந்த ரோட்டில் அமைந்திருக்கும் சிசிடிவி கேமரா களையும் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.