என் கணவர் இறந்துவிட்டார்..! ஆனால் அவர் மூலமாகவே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்! இளம் மனைவியின் விபரீத ஆசை!

கனடா நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் கணவர் இறந்த பின்பு அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுக்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது அதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கனடா நாட்டை சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் . அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார் . இதனால் அந்த பெண் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். அதிலும் இந்த தம்பதியினருக்கு நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆசையாம்.

ஆகையால் அந்தப் பெண் இறந்துபோன தன் கணவருடைய உயிரணுக்களின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறாள். இதனையடுத்து தன் கணவனின் உயிர் அணுக்கள் தனக்கு தேவை என்றும் அதன் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த பெண்ணிற்கு சாதகமாக உயிர் அணுக்களை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் கணவருடைய உயிரணுக்களை மருத்துவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சேகரித்து பாதுகாத்து வந்துள்ளனர். இதற்கிடையில் கனடா நாட்டு நீதிமன்றம் தாங்கள் அளித்த உத்தரவு சரியானதா என்று மறு பரிசீலனை செய்தது. அப்போது இறந்துபோன ஒருவரின் இனப்பெருக்க உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாக அளிக்கலாமா என்பது குறித்த தெளிவான சட்ட முறைகள் கனடா நாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் முதலில் உயிரணுக்களை தர சம்மதித்த நீதிமன்றம் பின்னர் இதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்து போன அந்தப் பெண்மணி தன்னுடைய கணவரின் உயிரனுக்கள் தனக்கு சொந்தமான சொத்து என்று கூறி தன் பக்க நியாயத்தை முன்வைத்தார். 

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ஒருவேளை அந்தப் பெண் இந்த வழக்கில் வெற்றி பெற்றால் அவருக்கு அளிப்பதற்காகவே அவரது கணவரின் உயிரனுக்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டது என்றும் இறந்துபோன ஒருவரின் உயிரணுக்களை சொந்தம் கொண்டாட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கினார். 

கனடா நாட்டின் சட்டத்தின்படி இறந்துபோன ஒருவரின் இனப்பெருக்க உறுப்புக்களை தானமாக அளிக்க வேண்டுமென்றால் அவர் உயிருடன் இருக்கும் பொழுதே கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் , இல்லையேல் அதை மற்றவர்களுக்கு தர இயலாது. அப்படியாக இந்த பெண்ணின் கணவர் எந்த ஒரு எழுத்துப்பூர்வமான ஒப்புதலும் அளிக்காததால் நீதிபதிகள் முன்பு அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்து புதிய தீர்ப்பு வழங்கியுள்ளனர்.