ஒருவருக்கு 21 வயது! இன்னொருவருக்கு 17! மற்றொருவருக்கு 16! நெல்லையில் அடுத்தடுத்து மாயமாகும் இளம் பெண்கள்! பீதியில் பெற்றோர்!

திருநெல்வேலி: இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயமாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லையில் உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராமி நாச்சியார். 20 வயதான இந்த பெண், திருப்பூரில் உள்ள மில் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி சொந்த ஊருக்கு வந்த அபிராமி, பிறகு வேலைக்குச் செல்வதாக புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர்  வழியிலேயே மாயமாகிவிட்டார். எங்கு சென்றார் என்று தெரியாமல் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி சிங்கை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  

இதேபோல, மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் பூமிகா. 17 வயதான இவர், மார்ச் 9ம் தேதி கல்லூரி செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  இதற்கடுத்தப்படியாக, குப்பனாபுரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி. 16 வயது சிறுமியான இவர் பள்ளி தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

இதுபற்றி சிறுமியின் தாய் இசக்கியம்மாள் போலீசில் புகார் செய்துள்ளார்.  சினிமா பாணியில், அடுத்தடுத்து இளம்பெண்கள் மாயமாகி வரும் சம்பவம் ஒருவேளை கடத்தல் கும்பலின் கை வரிசையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற சந்தேகத்தில் நெல்லை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.