அழகர் கோவில் ஒத்தையடி பாதை! காதலனுடன் தனிமையில் ஒதுங்கிய 15வயது சிறுமி! ஏற்கனவே காத்திருந்த இளைஞனால் அரங்கேறிய பாலியல் பயங்கரம்!

காதலனுடன் சென்ற 15வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் பொன் நகரம் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலியிடம் அழகர்மலை ஒத்தையடிப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். 

அப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வனஅதிகாரி என்று கூறிக் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், அந்த மர்ம நபர் சரவணனை தாக்கிவிட்டு அவருடைய காதலியை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஒருவழியாக மீண்டெழுந்த அந்த சிறுமி அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் மர்ம நபரை அங்கு அடையாளங்களை காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

அவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தனர். மேலூர் பகுதியை சேர்ந்த 29 வயதான நட்சன் என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நட்சன் செல்போன் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.