திருமணத்துக்கு முன்பே மாப்பிள்ளையுடன் லாட்ஜில் ரூம்! மணப்பெண்ணுக்கு காலையில் நேர்ந்த கொடூரம்! திருச்சி பரபரப்பு!

திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் லாட்ஜுக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் பரசலூர் என்னும் இடத்திற்கு உட்பட்டது மகாராஜபுரம் எனும் பகுதி. சித்ரா என்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மகாராஜபுரத்தில் வசித்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் சிறுபுலியூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். ராஜ்குமாரின் வயது 30. இவர் திருச்சியில் சிறப்பு காவல் படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

ராஜ்குமாருக்கும் சித்ராவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் அடுத்த மாதம் 16-ஆம் தேதியன்று திருமணம் நடத்தி வைக்க திட்டமிட்டனர். சென்றவாரம் விடுமுறையில் வந்திருந்த ராஜ்குமார் சித்ராவின் வீட்டார் சம்மதத்துடன் அவரை திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். 

நேற்று காலை திருச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதியில் இருவரும் தங்குவதென்று முடிவெடுத்தனர். சித்ராவை அறையில் விட்டுவிட்டு ராஜ்குமார் தன்னுடைய பணிக்கு சென்றார். காலை 10:20 மணியளவில் ராஜ்குமாருக்கு சித்ரா கால் செய்துள்ளார்.

பதறி அடித்துக்கொண்டு 11 மணியளவில் ராஜ்குமார் லாட்ஜுக்கு விரைந்தார். அப்போது அறையில் மின் விசிறியில் சித்ரா தூக்கிட்டு பிணமாக கிடந்ததை கண்டு ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை வெளியில் தெரிவிக்காமல் ராஜ்குமார் ஆம்புலன்ஸ் மூலமாக சித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு சித்ராவின் சடலத்தை எடுத்து சென்றுள்ளார்.

சொந்த மகளை சடலமாக கண்ட சித்ராவின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். ஒருவழியாக தங்களை தேற்றி கொண்டு இறுதி சடங்குக்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.

சித்ரா இழந்த விதத்தில் மர்மம் இருப்பதால் கிராமத்து பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சித்ரா தற்கொலை செய்து கொண்டதை குறித்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பரசலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.