பிறந்த நாள் கொண்டாட தனித் தீவுக்கு சென்ற 21 வயது இளம் பெண்! அங்கு அவருக்கு ஏற்பட்ட பயங்கரம்!

பிறந்தநாளை கொண்டாட சென்ற இளம்பெண் எரிமலை வெடித்து பலியான சம்பவமானது ஆஸ்திரேலிய நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் என்னும் நகர் அமைந்துள்ளது. இங்கு கிறிஸ்டல் ஈவ் புரோவிட் என்ற 21 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் கால்நடை மருத்துவம் பயின்று வந்துள்ளார். இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஓய்ட் தீவுக்கு சென்றுள்ளார். 

அப்போது ஓய்ட் தீவில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஜெர்மனி,மலேஷியா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 47 பேர் சிக்கி கொண்டனர். நியூசிலாந்து அரசாங்கம் மீட்பு பணியை துரிதப்படுத்தியது. இதனால் முதற்கட்டமாக 9 பேர் பலியானார்கள் என்றும், 30 பேர் படுகாயமடைந்தனர் என்றும், 6 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் அறிக்கை வெளியானது.

காணாமல் போன 6 பேரின் சடங்குகளையும் மீட்புப்படையினர் மறுநாளில் கண்டுபிடித்தனர். மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியானது. இறந்தவர்களில் அடையாளம் குறித்து நியூசிலாந்து அரசாங்கம் நேற்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அதில் பிறந்த நாளை கொண்டாட சென்ற கிரிஸ்டல் பெயரும் இடம்பெற்றிருந்தது. 

கிரிஸ்டலின் தந்தை மற்றும் சகோதரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவருடைய தாய்க்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த சம்பவமானது நியூசிலாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.