திருமணமான பெண் குளிக்கும் வீடியோ! திருமணமாகாத இளைஞர் செய்த பகீர் செயல்!

இளம்பெண் குளித்துக்கொண்டிருந்த போது இளைஞர் வீடியோ எடுத்துள்ள சம்பவமானது நாகர்கோவில் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. ஜீவாவின் வயது 22. ஜீவாவின் வீட்டருகே திருமணமான 26 வயது இளம்பெண் வசித்து வருகிறார். ஜீவாவின் மற்றொரு பெயர் இளங்கோ.

இந்த இளம்பெண் தினமும் வீட்டிற்கு பின்புறத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 2 நாட்களுக்கு முன்னர் வீட்டின் பின்புறத்தில் குளித்து கொண்டிருந்தபோது ரகசிய பொருள் ஒன்று மதில் சுவர் அருகே இருப்பதை கண்டறிந்துள்ளார்.

உடனடியாக அதனை எடுத்து சோதித்த போது, அது ரகசிய கேமரா என்று தெரியவந்துள்ளது. அந்த கேமராவை யார் வைத்திருப்பார் என்பதை கண்டுபிடித்தார் அவர் நாடகமாடினார். அப்போது அவர் இளங்கோ கேமராவை எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இளங்கோவிடம் விசாரித்துள்ளார். அதற்கு இளங்கோ அந்த இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள இளங்கோவை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது நாகர்கோவில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.