திடீரென சுற்றி வளைத்த போலீஸ்..! அதிகாலை அலர்ட்..! மதுரை நந்தினயை அலேக்காக தூக்கிய காவல்துறை! காரணம் இது தான்!

மதுக்கடைகளை மூடக்கோரியும், விழுப்புரத்தில் இளம்பெண்ணை தீ வைத்து எரித்து கொலை செய்த நபர்களையும் கைது செய்யக்கோரி மது ஒழிப்பு போராளி நந்தினி போராட்டம் செய்து சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி. இவரும் இவருடைய தந்தையும் நாட்டின் பல்வேறு இடங்களில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் மீது நாட்டில் பல்வேறு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை இவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். உயர் நீதிமன்றம் தடை விதித்த பிறகும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த முடிவெடுத்தவுடன் தன்னுடைய ஆட்சேபனையை வெளிப்படையாக நந்தினி தெரிவித்தார்.

இதற்கிடையே விழுப்புரத்தில் ஜெயஸ்ரீ என்ற இளம்பெண்ணை அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் மது அருந்திவிட்டு உயிருடன் எரித்து கொலை செய்தனர். மது விற்பனைக்கு சாதகமாக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதையும், ஜெயஸ்ரீ உயிருடன் தீ வைத்து எரித்து கொலை செய்த நபர்களையும் கைது செய்யப்படுவதைவலியுறுத்தியும் மதுரை உயர் நீதிமன்றத்தின் வாயிலில் போராட்டம் நடத்தப்போவதாக நந்தினி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி, காவல்துறையினர் இன்று அதிகாலையில் இருந்தே நந்தினியின் வீட்டை சுற்றி வளைத்தனர். இன்று காலை தான் கூறியது போல காவல்துறையினரின் அறிவுரையை மீறியும் நந்தினியும் அவருடைய தந்தையும் போராட்டம் செய்ய பயணம் மேற்கொண்டனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.