மேக்அப் வேகமாக கலைந்துவிட்டதாம்! மன விரக்தியில் இளம்பெண் தற்கொலை!

மேக்அப் சரியாக அமையாததால், மன விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள தாட்நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் பெயர் ருக்மா பாஸ்கர் (27 வயது). இவர், புதன்கிழமை காலையில், தனது வீட்டு பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது கணவர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், இதுபற்றி பிறகுதான் தகவல் தெரியவந்தது. போலீசார் விரைந்து வந்து, அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ருக்மா, மரணவாக்குமூலம் எழுதி வைத்ததையும் கண்டறிந்தனர்.

அந்த கடிதத்தில், ''கஜல் அணியும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், எனது கண்களில் இருந்துஅடிக்கடி நீர் கசிந்ததால், கஜலை அணிய முடியவில்லை. இதனால், என்னை பார்க்க அசிங்கமாக இருக்கிறது. அழகாக இருக்க முடியவில்லை என்னு எழுதியுள்ளார்.

என்பதால், நான் தற்கொலை செய்துகொள்கிறேன்,'' என்று ருக்மா எழுதியுள்ளார்மேக்அப் கலைந்ததால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேடிக்கையாகவும், அதேசமயம் இன்றைய இளம் தலைமுறையினரின் வருந்தும்படியான வாழ்க்கை சூழலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது

ருக்மா எப்போதுமே தான் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பவர் என்று கூறுகிறார்கள். இதற்காக அதிகம் மேக் அப்பில் அவர் கவனம் செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேக் அப்பில் மிக முக்கியமானதாக கருதப்படுவது கஜல்.

அது சரியாக அமையவில்லை என்பதால் மேற்கொண்டு அவரால் மேக்கப் செய்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அழகுக்கலை நிபுணர்களிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் ருக்மா இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார். ருக்மாவின் கணவர் கதறியது காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது.