ஏண்டி காதலிக்க மாட்டியா? வீடு புகுந்த இளைஞனால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய பகீர் சம்பவம்! சிதம்பரம் திக்திக்!

காதலித்த பெண் தன்னுடைய காதலை நிராகரித்ததால் இளைஞர் அவரை கத்தியால் குத்திய சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வடமூர் என்னும் பகுதியை சேர்ந்த இளம்பெண், அங்கு அமைந்துள்ள ஹாட் சிப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த பெண்ணின் வயது 18. அதே உணவகத்தில் களமருதூரை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞனும் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது சக்திவேலுக்கு சம்பந்தப்பட்ட பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை சக்திவேல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை முயற்சித்தும் சம்பந்தப்பட்ட பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் நேற்று காலை சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

தன்னை காதலிக்குமாறு சக்திவேல் அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை கழுத்து,கை,கால் ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இளம்பெண் அலறியவுடன் பயந்துபோன சக்திவேல் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது வடமூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.