தனி ஒருத்தி..! பிரியங்காவுக்கு நீதி கேட்டு தன் ஆளாக சாலையில் உட்கார்ந்த இளம்பெண்! யார் தெரியுமா?

பாராளுமன்ற வளாகத்தில் இளம்பெண் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவமானது‌ டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் பாராளுமன்றம் அமைந்துள்ளது. இதன் வாயிலில் அனு தூபே என்ற இளம்பெண், "ஏன் என் சொந்த நாட்டிலேயே என்னால் பாதுகாப்பாக உணர இயலவில்லை" என்ற பதாகையை கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். உடனடியாக அங்கு அப்பகுதி காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்‌.

ந்த பெண்ணிடம் "ஜந்தர் மந்தர்" பகுதிக்கு சென்று போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். காவல்நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில்,  "என்னால் என்‌ சொந்த நாட்டிலேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லையே" என்று கூறி கதறி அழுதுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவமும், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 25 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் அனு தூபேவை, போராட்டம் நடத்துவதற்கு தள்ளியதாக கூறப்படுகிறது. 

இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி காவல்துறையினர் அந்த பெண்ணை விடுவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது பாராளுமன்றத்தின் வாயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.