கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வைத்து 22 வயது இளம்பெண் கற்பழிப்பு..! கெஞ்சியவருக்கு பிறகு ஏற்பட்ட பயங்கரம்!

நைஜீரியாவில் தேவாலயத்திற்குள் வைத்து இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


நைஜீரியாவில் ஏடோ(Edo) என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உவாலா ஒமோசுவா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 22. இவர் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பயின்று வந்துள்ளார். கல்லூரி மாணவியான இவர் தினம்தோறும் படிப்பதற்கு முன்பாக தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உவாலா அதே தேவாலயத்திற்கு சென்றிருக்கிறார். 

சாவியை வாங்கி வருவதற்காக அங்கே இருந்த பாதுகாவலர் தேவாலயத்தை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இதனையடுத்து உவாலா மட்டும் தனியாக தேவாலயத்தில் இருந்து இருக்கிறார். தேவாலயத்தின் பாதுகாவலர் சாவியை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது உவாலா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் அருகில் இருந்தவர்களின் உதவியை கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த உவாலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உவாலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக உவாலாவிடம் இருந்து மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதாவது அந்த வாக்கு மூலத்தில் உவாலா தேவாலயத்தில் தனிமையில் இருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் கனமான பொருளை கொண்டு தன் தலையில் தாக்கியதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையிலும் இதுவரை இந்த வழக்கில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பலரும் ட்விட்டரில் #justiceforuwa என்ற ரேகை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.