ஓடும் காரில் ஒருவர் மாறி மற்றொருவர்! தஞ்சையில் கதற கதற கற்பழிக்கப்பட்ட இளம் பெண்! உடம்பெல்லாம் ரத்தம்!

தஞ்சையில் ஓடும் காரில் இளம் பெண் ஒருவரை கதற கதற கற்பழித்து விட்டு அவரை காரிலிருந்து வெளியே விசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி கடைவீதி என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் துணி எல்லாம் கிழிந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் விழுந்த கிடந்திருக்கிறார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடலில் பல இடங்களில் பலத்த ரத்த காயங்களோடு காட்சியளித்த அந்த இளம்பெண் மயக்க நிலையிலேயே கிடந்துள்ளார். இதனைப் பார்த்த மாதர் சங்கத்தை சேர்ந்த நபர்கள் அந்த பெண்ணிற்கு முதலுதவி அளித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. முதலுதவி அளித்த பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள், யார் என்ன என்று கேள்வி கேட்டு விசாரணை செய்துள்ளனர். விசாரித்த பொழுது அந்த பெண் இந்தியில் பேசி இருக்கிறார். இதனையடுத்து இந்தி தெரிந்த நபர் ஒருவரின் உதவியுடன் அந்த பெண்ணிடம் விசாரிக்கப்பட்டது. 

அப்பொழுது அந்த பெண் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் பெங்களூருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். வீட்டு வேலை செய்வதற்காக தஞ்சைக்கு ஒருவர் அழைத்து வந்ததாகவும் கூறி இருக்கிறார். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் அமைந்திருக்கும் ஒருவரது வீட்டில் அந்த பெண் கடந்த 5 மாத காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களாகவே அந்தப் பெண்ணை வீட்டு முதலாளியும் அவரது மனைவியும் இணைந்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர் என்று அந்த பெண் கூறியிருக்கிறார். நேற்றைய தினம் அந்த 4 பேர் தான் அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். காரில் அந்த பெண்ணை அழைத்து வரும்போது அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து செங்கிப்பட்டி அருகே இருக்கும் சாலையில் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அனைத்துமே அந்த சாலை ஓரத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. 

அந்த சாலை ஓரத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில், ஓடும் காரில் இருந்து பலத்த ரத்த காயங்களுடன் பெண் ஒருவரை தூக்கி வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் பகல் நேரத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதால் குற்றவாளிகளின் முகங்கள் தெளிவாக தெரியும் பட்சத்தில் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு அவரை அடித்து தாக்குதல் நடத்திய அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.