15 வயது சிறுமி கர்ப்பமாகும் வரை விடவே இல்லை..! 54 வயது ரியல் எஸ்டேட் அதிபர் அரங்கேற்றிய பகீர்!

15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் தொல்லைகள் கொடுத்துவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அசோக்நகரில் பால்ராஜ் (வயது 54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களில் ஒருவர் ஆவார். அதே அசோக் நகரில் பெற்றோர் இல்லாத 15 வயது சிறுமி தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுமி பால்ராஜின் வீட்டில் கடந்த ஓராண்டாக வீட்டுவேலை செய்து வந்துள்ளார். அப்போது பால்ராஜ் சிறுமியிடம் பாலியல் ரீதியில் சில்மிஷங்களில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளார்.வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக பால்ராஜ் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தால் பால்ராஜால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமி தன்னுடைய பாட்டியிடம் பல மாதங்களாக தான் சந்தித்து வரும் அவலங்களை கூறியுள்ளார். உடனடியாக சிறுமியின்  தரப்பிலிருந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பால்ராஜ் மீது புகாரளிக்கப்பட்டது.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பால்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அசோக் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.