தோட்டத்துக்கு குளிக்க போன பொன்னு! கற்பழித்து தலையை சிதைத்து கொடூர கொலை! ரெட்டை சகோதரர்கள் போட்ட வெறியாட்டம்!

குளிக்க சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இபப்குதியிலுள்ள தோட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். சம்பவமறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ஓணாப்பட்டியை சேர்ந்த மாதவன் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாதவன், "என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆதலால் ஆத்திரத்தில் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவி தன்னுடைய சொந்த ஊரில் திருவிழாவிற்காக மாணவி தன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.அடிக்கடி பக்கத்தில் இருந்து தண்ணீர் எடுக்க சென்ற போது, மாதவனுடன் மாணவிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று மாணவியை மாதவன் ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது மாதவனின் தம்பியும் அங்கே வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதற்காக மாணவியின் கழுத்தை நெறித்து அவருடைய தலையில் கல்லை போட்டு உடைத்தனர். அப்போது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அந்த மாணவியின் உடலை சாக்கு பையில் போட்டு புதருக்குள் புதைத்துவிட்டனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.