பர்த் டே ட்ரீட்..! முதலில் நான்..! பிறகு அவன்..! ஓடும் காரில் மாறி மாறி..! போதையில் இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!

வற்புறுத்தி மது கொடுக்கப்பட்டு இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தில் பானிபட் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள மாதிரி என்ற நகரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்துள்ளார். சென்ற வெள்ளிக்கிழமை மாலையில் டியூஷன் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

டியூஷன் சென்டர் நெடுநேரமாகியும் மாணவி அவருடைய வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சுற்று வட்டாரங்களில் தேடி வந்துள்ளனர். அப்போதும் அந்த மாணவியை பெற்றோரால் எளிதில் கண்டுப்பிடிக்க இயலவில்லை.

பின்னர் அப்பகுதியில் உள்ள பூங்காவில் மாணவி மயக்கமான நிலையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உடனடியாக அந்த இளம்பெண்ணை பெற்றோர் மீட்டெடுத்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முடிந்து, மயக்கம் தெளிந்த நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி, "நான் ட்யூஷன் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக என்னுடைய நண்பர்கள் என்னை பூங்காவிற்கு அழைத்தனர். மறுத்த போதிலும் என்னை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். 

அவர்களிடம் இருந்த மதுவை வற்புறுத்தி என்னை குடிக்க வைத்தனர். பின்னர் காரில் ஏற்றி பலவந்தமாக என்னை கற்பழித்தனர். அதனால் என்னுடைய உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன. பலாத்காரம் செய்துவிட்டு என்னை பூங்காவில் வீசிவிட்டு சென்றனர்" என்று கூறியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 4 இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆசிஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தலைமறைவாகியுள்ள மற்ற இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் அரியானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 99 பேர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.