ஒரே ஒரு நைட் அவங்க கூட தங்கணும்..! வெளிநாடு போய்டலாம்! நைஜீரியர்களுக்கு விருந்தாக்கப்பட்ட திருவண்ணாமலை மாணவி!

11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது  திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்தார். இவருடைய வீட்டின் மேல்பகுதியில் தேவாலயம் இயங்கி வந்தது. இந்த தேவாலயத்தில் 2017-ஆம் ஆண்டில் செல்லத்துரை என்பவர் பணியாற்றி வந்தார். அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய சிறுமி அவரிடம் கற்பை பறிகொடுத்து ஏமாந்துள்ளார்.

அதன் பின்னர் செல்லதுரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தப்பி சென்றுள்ளார். செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதியன்று வீட்டிலிருந்தபடியே நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் பார்க்க வந்திருந்தார். அந்த நபரை திருமணம் செய்து கொண்டால் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதாக மாணவிக்கு ஆசை காட்டியுள்ளனர்.

அதன்படி மாணவி அந்த நபருடன் சென்னைக்கு வந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 3 நாட்கள் தங்கி இருந்துள்ளனர். அப்போது நைஜீரியாவை சேர்ந்த நபர் அந்த மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியின் பெரியம்மா மாணவியை மீட்டு வந்தார். திருவண்ணாமலை லைன் ஊழியர்கள் 26-ஆம் தேதியன்று மாணவியை மீட்டெடுத்தனர். 

இந்த குற்றம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.