ஆஃபிஸ் டூட்டியாக தாய்லாந்து சென்று அநாதை சடலமாக கிடக்கும் இளம்பெண்! கதறும் குடும்பம்!

இந்திய பெண் ஒருவர் தாய்லாந்தில் கார் விபத்தில் இறந்துள்ள சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரக்யா பலிவால் என்ற 29 வயது இளம்பெண் வசித்து வந்தார். ஹாங்காங் நாட்டைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பெங்களூருவில் பணியாற்றி வந்தார்.

அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவானது தாய்லாந்து நாட்டில் உள்ள புக்கெட் என்ற இடத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக பிரக்யா இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்றார். அங்கு சென்றவுடன் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பிரக்யாவின் நன்பர்கள் அவர் இறந்த செய்தியை அவருடைய வீட்டில் கூறியுள்ளனர். இதைக் கேட்டவுடன் அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரக்யாவின் சடலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் அவருடைய உடலானது பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரக்யாவின் உறவினர்கள் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் அவர்களால் தாய்லாந்துக்கு செல்ல இயலவில்லை. இதுகுறித்து அவர்களுடைய எம்.எல்.ஏ விடம் கேட்டு பார்த்தனர். அவர் உடனடியாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரிடம் தெரிவித்தார். உடனடியாக தாய்லாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பிரக்யாவின் குடும்பத்தாருடன் பேசியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் கூறுகையில் மிக விரைவில் பிரியாவின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.