7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மகளை டிவியில் உயிருடன் பார்த்த பெற்றோர்..! தஞ்சையில் பதைபதைப்பு சம்பவம்! அதிர்ச்சி காரணம்!

7 ஆண்டுகளுக்க முன்னர் இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண் உயிருடன் இருப்பதாக பெற்றோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகனின் பெயர் இமாகுலேட். இமாகுலேட்டின் வயது 27. இவருடைய கணவர் பெயர் டேவிட். டேஈண்விட் நடத்திவந்த நிறுவனம் நஷ்டத்தை தந்ததால், இமாகுலேட் கணினி பொறியாளர் வேலைக்காக சவுதி அரேபியா நாட்டிற்கு இடம்பெயர்ந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு வீட்டு வேலை மட்டுமே கிடைத்தது. இதனால் அவர் பெரிதும் மனமுடைந்து போயுள்ளார். மன உளைச்சல் காரணமாக 2013-ஆம் ஆண்டில் இமாகுலேட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இந்தியாவில் வசித்து வந்த பெற்றோருக்கு தகவல்கள் கிடைத்தன‌. வழியாக மகளின் இறப்பு மர்மமிருப்பதாக கூறிய அந்தோணி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி இமாகுலேட் உடலை இந்தியாவிற்கு எடுத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி 2014-ஆம் ஆண்டில் திருச்சி விமான நிலையத்திற்கு இமாகுலேட் உடல் வந்தடைந்தது. அதன்பின்னர் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உடல் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் 23 பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக வெளியான வீடியோவில் இமாகுலேட் இருப்பதாக அவருடைய பெற்றோர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,"திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோதே அந்த உடல் இமாகுலேட் அல்ல என்று கூறினோம் ஆனால் இதை பரிசோதனை அறிக்கையை அதை இமாகுலேட் என்று கூறப்பட்டதால் நாங்களும் நம்பினோம் ஆனால் தற்போது சவுதி அரேபியாவில் சித்திரவதை அனுபவித்து வருகிறார். அவரை எப்படியாவது பத்திரமாக மீட்க வேண்டுமென்று வலியுறுத்து வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்" என்று கூறினர்.

இந்த செய்தியானது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.