திருமணம் ஆகாமல் குழந்தை! பிரசவத்தின் போது பலியான இளம் பெண்! தகவல் அறிந்து அக்காள் கணவன் செய்த விபரீதம்!

இளம்பெண் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவமானது மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறையில் தமிழ்ச்செல்வி என்ற பெண். சூலூர் பகுதியிலுள்ள கண்ணம்பாளையத்தில் இயங்கிவரும் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த ஊரில் வசித்து வந்த இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவர் கர்ப்பமானார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் சூலூர் அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பிரசவம் முடிந்து தமிழ்ச்செல்வி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் பெற்றெடுத்த சில நிமிடங்களிலேயே தமிழ்செல்வி உயிரிழந்துவிட்டார்.

சம்பவமறிந்து விரைந்து வந்த தமிழ்ச்செல்வியின் சகோதரியின் கணவரான ஆனந்த்ராஜ், தமிழ்ச்செல்வியின் உடலை ஊருக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு கண்ணம்பாளையத்திற்கு வந்தார்.

தமிழ்ச்செல்வியின் சகோதரி பிறந்த குழந்தையை அதே பகுதியை சேர்ந்த ராஜன்-செல்வி என்ற தம்பதியினருக்கு 7,500 ரூபாய்க்கு விற்றுள்ளனர். குழந்தையை பெற்றுக்கொண்ட தம்பதியினர் அதை அவர்களுடைய உறவினர்களிடம் அளித்துள்ளனர்.

இது சம்பந்தப்பட்ட தகவல்களை கோவை சைடு லைன் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அந்த குழந்தையை மீட்டெடுத்து குழந்தை நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவமானது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.