வாடகை வீடு! பலவந்தமாக உடல் உறவு! கர்ப்பம்! ஆனால்..? போலீஸ் எஸ்ஐ குறித்து இளம் நர்ஸ் கூறிய பகீர் தகவல்!

நாகர்கோவிலில் இளம்பெண் ஒருவர் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தன்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.


நாகர்கோவிலை சேர்ந்த நர்ஸ் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் போலீஸ் எஸ்ஐ வழக்கு விசாரணைக்காக தன்னை வாடகை வீட்டில் குடியேர சொல்லியதாகவும் , விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது போலீஸ் எஸ்ஐ தன்னை பலவந்தப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பம் ஆகியுள்ளார். 

இதனால் அந்த எஸ்ஐ திருவட்டாரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று எனது வயிற்றில் வளர்ந்த கருவை கட்டாயப்படுத்தி களைத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளார். பளுகல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த எஸ்ஐ தற்போது சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் போலீஸ் எஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.