காதலியின் அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்! காதலி எடுத்த விபரீத முடிவு!

தனது ஆபாச புகைப்படங்களை ஒரு நபர் இணையதளத்தில் வெளியிட்டதால் இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.


தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலி 41 சி.ஆர்.பி.எஃப். வீரர்களால் உயிரிழந்தததில் இருந்து புல்வாமா மாவட்டம் செய்திகளில் அவ்வப்போது இடம் பெற்று வருகிறது. இந்தப் பெண்ணும் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான். ஆனால் சம்பவம் பொது முக்கியத்துவம் இல்லாத தனிப்பட்ட நபருடையது. 

புல்வாமா மாவட்டத்தின் முர்ரன் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அவர் முடாசிர் அகமது காண்டே என்ற நபருடன் பழகி வந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்துள்ளனர். காதலன் தானே என்று அந்த பெண்ணும் முடாசிருடன் அப்படி இப்படி இருந்துள்ளார். அவ்வப்போது வரம்பும் மீறியுள்ளார்.

அப்போது பெண்ணின் அனுமதியோடு சில புகைப்படங்களையும் முடாசிர் எடுத்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் அந்தப் பெண்ணின் ஆட்சேபத்துக்குரிய சில படங்களை இணையதளத்தில் வெளியிட்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு குந்தகம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூனிக் குறுகிப் போன அந்தப் பெண் தனது வாழக்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். 

கடந்த வியாழக்கிழமை விஷத் தன்மை  கலந்த திரவத்தைக் குடித்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் முடாசிர் மீது அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கள் மகளின்  மரணத்துக்கு முடாசிர் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதே காரணம் என்றுதெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முடாசிரை போலீசார் கைது செய்துள்ளனர்.