திருமணமாகி ரெண்டே மாதம்..! நடு வீட்டில் சடலமாக தொங்கிய நர்ஸ்! பதற வைக்கும் காரணம்!

வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி வந்ததால் திருமணமான 2 மாதங்களிலேயே  புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருவள்ளூர் மாவட்டத்தில் வல்லூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பத்மபிரியா என்ற பெண் வசித்துவந்தார். இவர் இதே பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இதனிடையே இவருக்கு மேலூர் பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரியான ராஜாராம் என்பவருடன் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்தே பத்மப்ரியாவை வரதட்சணை கேட்டு ராஜாராம் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த கொடுமையை தாங்க இயலாமல் பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சனை கொடுமை புகார் அளித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தகராறு எழுந்ததால், பத்மபிரியாவை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற பத்மப்ரியா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் தன்னுடைய அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவருடைய பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பத்மபிரியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கண்டுபிடித்தனர். அதில் "தற்கொலை செய்துகொள்வதற்கு என்னுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணமாவர். அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று எழுதி வைத்திருந்தார்.

கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.