கோவையில் வந்து ரூம் போட்ட காதலி! காதலன் கேட்ட ஒரே ஒரு கேள்வி! இளம் பெண்ணுக்கு பிறகு அரங்கேறிய பயங்கரம்!

இளம்பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கு அருகே நீலாமங்கலம் வெற்றாங்கரை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு அரசு ஊழியராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ப்ரீத்தி என்ற மகள் உள்ளார். சுமதியின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட, தனியாளாக ப்ரீத்தியை சுமதி வளர்த்து வந்தார்.

ப்ரீத்தி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மத்திய அரசின் தபால்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று தாமரைக்குளம் தபால் நிலையத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ப்ரீத்தி தன்னுடைய தாத்தாவான தங்கையன் வீட்டில் தங்கி வந்தார்.  2 நாட்களுக்கு முன்னால் கல்லூரி நண்பர்களை பார்த்து வருவதற்காக கோவை மாவட்டத்திற்கு சென்றார். அங்கிருந்து வீடு திரும்பியவுடன் நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் எதிர்பாராவிதமாக மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு ப்ரீத்தி தீக்குளித்தார்.

ப்ரீத்தியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பிரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ப்ரீத்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையை தொடங்கிய உடன் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 

அதாவது, கல்லூரி நாட்களில் பிரீத்தி ஒரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தபால் உடையதாக சேர்ந்த பிறகு அவருடன் முன்புபோல் சரிவர பேச இயலாததால் இருவருக்குள்ளும் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் ப்ரீத்தி கோவைக்கு சென்றபோது அவருடைய காதலன் கூறிய ஓட்டலில் தங்காமல் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார்.

இதனால் ப்ரீத்தியின் காதலர் அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டுள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத பிரீத்தி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. தங்களுடைய பூர்வீக சொத்தை அவருடைய தாய் விற்க முயன்றது ப்ரீத்திக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த சம்பவமானது மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.