நம்பி முந்தி விரிச்சேன்..! இப்படி பண்ணிட்டான்..! கழுத்தில் தாலியில்லாமல் கையில் குழந்தையுடன் நிற்கும் இளம் பெண்!

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி இளைஞர் கர்ப்பமாகியுள்ள சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சிறுவாடி என்னும் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் பொன்னுசாமி. பொன்னுசாமியின் வயது 21. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் ப்ரியா என்ற 19 வயது பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலித்த போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக பொன்னுசாமி பிரியாவிடம் வாக்குறுதி அளித்துள்ளார். வாக்குறுதியை நம்பிய பிரியா பொன்னுசாமியுடன் உடலுறவு வைத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா பொன்னுசாமியை பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பொனானுசாமி திருமணத்தை தள்ளிப்போட்டே வந்துள்ளார். இதனிடையே பிரியா சென்ற ஆண்டு கர்ப்பமானார். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் பிரியா அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு பிரியா பொன்னுசாமி வற்புறுத்தினார். ஆனால் பொன்னுசாமி நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள இயலாது என்று பிரியாவிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பிரியாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த பிரியா நிகழ்ந்தவற்றை கூறி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பொன்னுசாமியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.