உடல் முழுவதிலும் சிகரெட் சூட்டுடன் கர்ப்பிணி பெண்ணொருவர் இறந்து கிடந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் முழுவதும் சிகரெட் சூடு! சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி! திருமணத்திற்கு முன்பே அவசரப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரோஜா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
அப்போது ராஜேஷ் என்பவருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் உல்லாசமாக சுற்றித்திரிந்துள்ளனர். இதனால் ரோஜா கர்ப்பம் அடைந்தார்.
பின்னர் ரோஜா, ராஜேஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ராஜேஷும், ரோஜாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உடலில் சிகரெட் சுட்டு பல்வேறு இடங்களில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தது ரோஜா என்பதை கண்டறிந்துள்ளனர். உடனடியாக ரோஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த ரோஜாவின் உறவினர்கள், ரோஜா இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.
பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ராஜேஷ் ஆசை காட்டி ரோஜாவை ஏமாற்றி கொடுமைப்படுத்திக் கொலை செய்ததாக காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். மேலும் ரோஜா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் உறவினர்கள் புகாரில் கூறியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் ரோஜாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜேஷ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.