போலீஸ் ஸ்டேசனுக்குள் தரையில் இளம் பெண்ணை படுக்க வைத்து...! சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணை, ஈவிரக்கமின்றி காவல்துறையினர் தாக்கியதில் வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வலிப்பால் துடித்து கொண்டிருந்த வீடியோ காட்சி வெளியானது. அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வாயிலிலிருந்து கூச்சலிடுவது போன்றும் வீடியோவில் தெரிகிறது.

இந்நிலையில் விசாரித்து பார்த்ததில் மேற்கூறப்பட்ட சம்பவமானது, சென்னை பாரிமுனையில் உள்ள காவல் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. வீடியோவில் துயர நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காவேரி என்ற 25 வயது பெண் என்பதும் தெரியவந்துள்ளது. 

இவருடைய அண்ணன் இயக்கி வந்த பழக்கடையை எடுக்குமாறு காவல் துறையினர் தகராறு செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று அண்ணனுக்கு ஆதரவாக காவேரி காவல்துறையினரை எதிர்த்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் அண்ணனுடன் சேர்ந்து காவேரியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு காவேரியை பலமாக அடித்து உதைத்ததால் அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்தப் பெண்ணை காவல்துறையினர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.