வகுப்பறையின் வாயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த சிறுமி அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் வறுமை! வயிற்றில் பசி! கையில் தட்டோடு வகுப்பறை வாசலில் நின்று பாடம் பயின்ற சிறுமி! இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ஹைதராபாத் மாநகரில் குடிமல்கப்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் "தேவல் ஜாம் சிங்" என்ற அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தினந்தோறும் ஒரு வகுப்பறை வாயிலில், சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் கையில் தட்டை ஏந்திக்கொண்டு, ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களை கவனிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. மேலும் பிரபல ஊடகம் இதனை செய்தியாகவும் வெளியிட்டது.
பின்னர் விசாரணை நடத்தப்பட்டதில், இந்த சிறுமி தினமும் பள்ளிக்கு வருவார் என்றும், பள்ளி முடிந்தவுடன் இருக்கும் மிச்ச உணவுகளை உண்பார் என்றும் தெரியவந்தது. சிறுமியின் பெயர் திவ்யா என்பதும், அவர் அருகில் உள்ள சேரியில் வசித்து வருகிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய பெற்றோர் குப்பை சேகரிப்பாளர்கள் என்பதும் தெரியவந்தது.
தற்போது அந்த சிறுமி அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவரின் பெற்றோர் மிகவும் ஆனந்தமாக உள்ளனர். மாணவி பள்ளியில் சேர்க்கப்பட்டது காரணம் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. செய்தியாளர் அந்த கிராமத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.