ஒரு அறையில் தாய்..! இன்னொரு அறையில் தந்தை! குழந்தை முன்னால் செய்யக்கூடாததை செய்த பகீர்! பிறகு?

காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரிக்கா என்ற இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரமானது இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் இருவீட்டாருமே இவர்களுடைய காதலை எதிர்த்து வந்துள்ளனர்.வேறுவழியின்றி வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தினருடன் எதிர்ப்பை சம்பாதித்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தங்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் சந்திரிகாவை அவருடைய குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தனர். குடும்பத்தினருடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் சந்திரிகா கணவருடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். பிரன்ஸ் அதே பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் ஊரடங்கு தொடங்கிய காலத்தில் பிரின்ஸின் வேலையானது பறிபோனது. இதனால் குடும்பம் வறுமையில் வாடும் நிலைமை ஏற்பட்டது. வறுமையினால் அவ்வப்போது கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டுக்கொள்ள தொடங்கினர். நேற்றும் வழக்கம் போல கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சண்டையினால் மனவருத்தம் அடைந்த பிரின்ஸ் தன்னுடைய அறைக்கு சென்று மனைவியின் புடவையை மின்விசிறியில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதனை சந்திரிகா ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

தன் கணவர் தன் கண்முன்னே தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரிகா உறவினர் ஒருவருக்கு கால் செய்துள்ளார். அந்த உறவினரிடம் நிகழ்ந்தவற்றை கூறிய பின்னர், குழந்தையை தனியாக விட்டுவிட்டு வேறொரு அறைக்கு சென்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு உறவினர்களும் காவல்துறை அதிகாரிகளும் அவர்களுடைய வீட்டிற்கு விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் தந்தை தற்கொலை செய்து கொண்டதை கூட அறியாமல் குழந்தை நடுவீட்டில் அழுது கொண்டிருந்த சம்பவமானது உத்திரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.