எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெற்றோர், இளம் ஜோடியை வெட்டி கொலை செய்திருக்கும் சம்பவமானது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் காதல் கணவன் - மனைவிக்கு சொந்த வீட்டிற்குள் அரங்கேறிய பயங்கரம்! நெஞ்சை உறைய வைக்கும் பகீர் சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோலைராஜ். இவர் அங்குள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் அதே உப்பளத்தில் பணிபுரிந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது. இருவரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராவிதமாக இவர்களின் காதல் விவகாரமானது, இரு வீட்டிலும் தெரியவந்தது. இருவீட்டாரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள்.ஆனால் தொடக்கத்தில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள இயலாது என்பதை உணர்ந்த காதல் ஜோடி 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். தொடக்கத்தில் எதிர்ப்பு வளர்த்தாலும் சோலை ராஜ் குடும்பத்தினர் திருமணத்தை ஆதரித்தனர். அவர்கள் வீட்டருகே ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தனர்.
இன்று நெடுநேரமாகியும் சோலைராஜும், ஜோதியும் வீட்டில் இருந்து வெளியேவரவில்லை. இதனால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர், வீட்டினை உடைத்து சென்றனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக மிதந்து கொண்டிருந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு, சோலைராஜும் அவருடைய உறவினர்களும் அரசு பொது மருத்துவமனை வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொரு காவல்துறையினர் சமாதானம் செய்ததையடுத்து போராட்டத்தினை கைவிட்டனர் இந்த சம்பவமானது கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது