லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய காதல் ஜோடி..! மறுநாள் அறை முழுவதும் ரத்தம்..! பேச்சு மூச்சற்று கிடந்த பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

ஹோட்டல் அறையில் இளம் காதல் ஜோடி சடலமாக கிடந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு தேஜஸ்வி என்ற 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த சாகர் பாபு என்ற 25 வயது இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளது.

இதனிடையே இருவரும் அப்பகுதியிலுள்ள தெனாலி ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை வரை அறையின் கதவு ஒருமுறை கூட திறக்கப்படவில்லை. ஓட்டல் ஊழியர்களும் கதவை தட்டி பார்த்தனர். அப்போதும் எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அப்பகுதி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது கட்டிலில் தேஜஸ்வி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குளியல் அறையை உடைத்து சென்றபோது சாகர் பாபு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அறையில் சோதனை நடத்தியபோது அங்கு பூச்சிமருந்து கிடைத்துள்ளது. பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதும், 7-ஆம் தேதி முதலே தேஜஸ்வி காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவமானது கிருஷ்ணா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.