வராந்தாவில் குடும்பமே அரட்டை..! தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை! அங்கு இருந்த வாளிக்குள் அரங்கேறிய பகீர்!

பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவமானது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் கொத்தால்சாவடி என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சின்னத்தம்பி தெருவில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 1.5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ரிஹானா ஃபாத்திமா. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

சென்ற மாதம் 26-ஆம் தேதியன்று குழந்தை படுக்கை அறையில் விளையாடிக்கொண்டிருந்தது. உசேன் மற்றும் அவரது தந்தையார் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கதையடித்து கொண்டிருந்தனர். ரிஹானாவின் தாயார் சமையலறையில் சமைத்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தையின் அருகே யாருமில்லை. குழந்தை மெல்ல படுக்கை அறையிலிருந்து திறந்திருந்த குளியலறைக்குள் நுழைந்துள்ளது. தன் உயரத்திற்குள்ள வாளியில் அந்த குழந்தை நுழைய முயன்றுள்ளது. இயலாத போது அருகே இருந்த ஒரு சிறிய கல் மீது ஏறி வாளியில் நுழைய முற்பட்டது. ஆனால் அப்போது குழந்தை தலை குப்புற வாளிக்குள் விழுந்துள்ளது. வாலியில் ஏற்கனவே தண்ணீர் இருந்திருந்தது.

இந்நிலையில் குழந்தையின் தாத்தா, குழந்தையை காணவில்லை என்று படுக்கை அறையில் வீட்டு வாசல் மற்றும் தெருமுனை வரை தேடியுள்ளார். ஒரு வழியாக குழந்தையின் தாயார் குளியலறையில் தேடி தலைகுப்புற உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தையை மீட்டெடுத்தார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

கடந்த 6 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தை, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது. சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் வீட்டிலிருந்த போதே குழந்தை எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவமானது அந்த குடும்பத்தினரை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.