சாப்பாட்டில் மயக்க மருந்து..! மயங்கிய இளம் காதலி..! 80 வயது முதியவருக்கு விருந்தாக்கிய காதலன்! வெளிநாட்டு தொடர்பு! பகீர் தகவல்கள்!

காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை காதலரும், முதியவர் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது ஹைதராபாத் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநிலத்தில் பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட எம்.எல்.ஏ குடியிருப்பில் என்பது வயதான முகமது சலீமதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்குக் கீழ் அதே பகுதியை சேர்ந்த அப்துல் என்ற இளைஞரும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்துல் தான் வேலை செய்து வந்த இடத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரின் காதலையும் பெண்வீட்டார் தெரிந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் காதல் மீது கொண்ட மோகத்தால் காதலனை எப்படியாவது மணமுடிக்க வேண்டும் என்று அந்த பெண் முடிவு செய்துள்ளார். காதலனின் உதவியுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் இருவரும் சலீமுதீன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போதைக்கு எந்தவித பதிவு திருமணமும் செய்ய இயலாததால் இருவரையும் சலீமுதீன் தன்னுடைய வீட்டிலேயே அடைக்கலமாக்கினார். அதன் பின்னர் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்க செய்துள்ளனர். அந்தப் பெண் மயங்கிய பிறகு இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களையும் இருவரும் கச்சிதமாக படம் எடுத்துள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் இவற்றை அந்தப் பெண்ணிடம் காட்டி மிரட்டியுள்ளனர். அந்தப் பெண் இவர்களுடைய மிரட்டலுக்கு அஞ்சாது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் தாங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அந்தப் பெண் மீது பொய்யான திருட்டு பழியை சுமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணும் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறி வேறு ஒரு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் காதலராக ஏமாற்றி அப்துல் மற்றும் முகமது சலீமுதீன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. முகமது சலீமூதின் ஏற்கனவே நான்கு பெண்களுடன் திருமணமானவர் என்பதும், அனைவரும் துபாயில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. 

மேலும் அப்துல் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுடைய வலையில் விழுத்தி அவர்களை நாடு கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அடுத்தடுத்த கட்டங்களில் நடத்தும் விசாரணையை பொருத்தே பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.