கனடா செல்லும் தேர்வின் ரிசல்ட்! பர்ஸ்ட் கிளாசில் பாஸ் ஆன சுபஸ்ரீ! ஆனால்..! கதறும் பெற்றோர்!

கனடா செல்வற்கான தேர்வில் பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ 9க்கு 7 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கனடா சென்று பணியாற்றும் ஆசையில் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிர் பறிபோனது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. இந்த நிலையில் சென்னை பிடெக் படிப்பு முடித்திருந்த சுபஸ்ரீ  முதுகலை படிப்பை கனடாவில் படிக்க முடிவு செய்திருந்தார். இதற்காக கடந்த 7 மற்றும் 10 தேதி சென்னை பிரிட்டிஷ் காலேஜில் ஐஐஎல்டிஎஸ் எனும் தகுதித்தேர்வு எழுதியிருந்தார்.  

இந்த நிலையில் நேற்று சுபஸ்ரீ வீட்டிற்கு கனடா தூதரகத்தில் இருந்து கொரியர் வந்துள்ளது. அந்த கொரியரில் ஐஐஎல்டிஎஸ் தேர்வில்  சுபஸ்ரீ முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த கொரியரை பார்த்து சுபஸ்ரீ பெற்றோர் கதறி அழுதனர். சுபஸ்ரீ தகுதி தேர்வில் 9 மதிப்பெண்களுக்கு 7 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். இதனால் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேல்படிப்பு கனடாவில் அவருக்கு கிடைத்திருக்கும். ஆனால் பேனரால் தனது மகள் உயிரிழந்துவிட்டதாக கூறி அவர்கள் கதறினர்.