65 வயது தயாரிப்பாளர் எனது மேலாடையை கழட்டுமாறு கூறினார்..! ஆனால்? 25 வயது நடிகை வெளியிட்ட பகீர் அனுபவம்!

வளர்ந்து வரும் முன்னணி பாலிவுட் கதாநாயகிகளில் ஒருவர் தயாரிப்பாளர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டானது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் மல்ஹார் ரத்தோட் ஒருவர். இவர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு சமூக ஊடகம் அவரிடம் கடந்து வந்த பாதை குறித்து பேட்டி எடுத்தது.

அந்த பேட்டியின் போது அவர் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைத்தார். அதாவது, திரையுலகில் முன்னுக்கு வருவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் திரையுலகில் என்னுடைய அதிர்ஷ்டத்தை சோதித்து பார்ப்பதற்காக நுழைந்தேன். முதன்முதலில் 65 வயது தயாரிப்பாளரிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன். 

அப்போது அவர் எனக்கு ஒரு படத்தில் சிறிய பாகம் இருப்பதாக கூறினார். ஆனால் அதில் நடிப்பதற்கு அவர் என்னுடைய மேலாடையை கழுட்டுமாறு கூறினார். இதனால் நான் பேரதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

திரையுலகத்திற்கு புதிது என்பதால் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை" என்று பேட்டியளித்தார்.இந்த பேட்டியானது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகம் என்றாலும் 65 வயது தயாரிப்பாளர் இப்படியா நடந்து கொள்வது?