YouTube ரிவ்யூ புகழ் புளு சட்டை மாறனை வலை வீசி தேடும் போலீஸ்!

YouTube மூலம் படத்திற்கு சாதகமான ரிவ்யூ கொடுக்க பணம் கேட்டு மிரட்டுவதாக புளு சட்டை மாறன் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


நடிகர் பிரபுதேவா நடித்து கடந்த வாரத்தில் வெளியான படம் சார்லி சாப்ளின் 2. ஏற்கனவே வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியுள்ளது. ஏய் ஏய் சின்ன மச்சான் எனும் பாடல் மூலம் சார்லி சாப்ளின் 2 படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அறியப்பட்ட ஒரு படம்.

 

   இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். படத்தை இயக்குனர் ஷக்திசிதம்பரம் இயக்கியுள்ளார். முதல் பாகத்தையும் இவர் தான் எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், சார்லி சாப்ளின் 2 குறித்து YouTubeல் தமிழ் டாக்கீஸ் சேனலில் புளு சட்டை மாறன் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

 

 மாறனின் விமர்சனம் படத்தில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பாக இருப்பதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் சக்தி சிதம்பரம் புகார் அளித்துள்ளார். படம் குறித்து தவறான தகவல்களை கூறிய ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

   தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிவா,  அனைத்து படங்களிலுமே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குறித்து விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக மரியாதை இல்லாமல் பேசி வருகிறார் தமிழ்மாறன்.  இதுகுறித்து பலமுறை நல்ல முறையில் எடுத்துக்கூறியும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

 

  அதை தொடர்ந்து தான் தற்போது நாங்கள் புகார் கொடுத்துள்ளோம் என்றார். பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்,  தவறான விமர்சனம் குறித்து கேட்டபோது அதை நீக்குவதற்கு எனக்கு என்ன தருவீர்கள், எனக்கு என்ன கிடைக்கும் என ப்ளூ சட்டை மாறன் கேட்டதாக தெரிவித்தார்.  இதுபோன்று தொடர்ந்து பணம் பிடுங்கும் நோக்கில் இது தவறான விமர்சனங்களை புளு சட்டை முன் வைத்து வருகிறார்.

 

   இது குறித்த ஆதாரங்களை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம்.  விரைவில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மாறன் மீது புகார் கொடுப்பார்கள் என நம்புகிறோம், என்றார்.

 

   இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். ஏனென்றால் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளதால் மாறனை அழைத்து விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது மாறன் எங்கு இருக்கிறார் என்று போலீசாருக்கு தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகின்றனர்.