அடப்பாவமே, அதுக்குள்ள கருணாநிதியை மறந்துட்டீங்களே… டென்ஷனாகும் உடன்பிறப்புகள்.

உதயநிதிக்கும் ஸ்டாலினுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, கருணாநிதியின் புகழ் மறைக்கப்படுவதாக தி.மு.க. உடன்பிறப்புகள் கவலை தெரிவிக்கின்றனர்.


கருணாநிதி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு என்ற போதிலும் அவரது ஆளுமையை, அயராத உழைப்பை, தமிழ் எழுத்தை அரசியல் எதிரிகள் கூட ஒத்துக்கொள்வார்கள். இப்படி திமுகவின் முகமாக அறியப்பட்ட கருணாநிதி அரசியலில் தன்னை வளர்த்து ஆளாக்கிய ஈவேரா, அண்ணா ஆகியோரை ஒருபோதும் மறந்ததில்லை. கட்சி தொடர்பான எல்லா விளம்பரங்களிலும் இந்த இருவரது படங்கள் கண்டிப்பாக இடம்பெறுவதை கடைசிவரை கருணாநிதி உறுதி செய்தார். 

ஆனால், அப்படிப்பட்ட கருணாநிதியின் பெயரோ, புகைப்படமோ இப்போது தி.மு.க. அறிவிப்புகளில் இடம்பெறுவதில்லை என்பதுதான் தொண்டர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கட்சியின் தேர்தல் பிரச்சாரமான ‘விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் கருணாநிதி முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார். பிரச்சார வேன்களில் தொடங்கி போஸ்டர்கள், பேனர்கள் எதிலும் கருணாநிதியின் படங்களை காண முடியவில்லை. முழுக்க முழுக்க ஸ்டாலினும், அவரது மகன் உதயநியும்தான் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். கனிமொழி செல்லும் இடங்களில் மட்டும் போனால் போகிறதென்று அவருக்கு கொஞ்சூண்டு விளம்பரம் தரப்படுகிறது.

இது தற்செயலாக நடக்கிற மாதிரி தெரியவில்லை. கலைஞருக்கு தொடர்ந்து விளம்பரம் தந்தால் எதிர்காலத்தில் உரிமை பிரச்சனைகள் வரலாம் என்கிற எண்ணத்தில் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். இதெல்லாம் தற்போதைய தலைவரோட கிச்சன் கேபினட் எடுக்கிற முடிவு என்கிறார்கள்.

பரிதாபம்தான்.