"என்னை நீங்கள் சாகடிக்கலாம், ஆனால் நீங்கள் தோற்கடிக்க முடியாது" தோழர் சேகுவேராவை நினைவு கொள்வோம்..!

’என்னை நீங்கள் சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் என்னை நீங்கள் தோற்கடிக்க முடியாது. என் இனிய தோழர்களே என்னுடைய துப்பாக்கியை நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்’ - என்று மரணத்தின் விளிம்பில் நின்று அறைகூவல் விடுத்தவன் சேகுவேரா. இன்று அந்தப் புரட்சிகாரனின் நினைவு நாள்.


ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி ஆகிய பெரும் புரட்சிகளுக்கு பின்னர் இளைஞர்களின் கனவாக மாறி, உலகில் சிவப்பு அலைகளை எழுப்பியவன் சேகுவாரா. இன்று கண்டங்கள் தோறும் அவன் தோழர்கள் கை கோர்த்து வீரியம் கொண்டு நிற்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் கருவறுக்கும் வகைவகையான ஆயுதங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

நாங்கள் உன் தோழனே உன் உறக்கமற்ற லட்சிய விழிகளை உற்று பார்கிறோம். அதிலுள்ள புரட்சியின் தீவிரம் எங்களுக்கு வழிகாட்டுகிறது. துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்ற மார்பகத்தைப் பார்கிறோம். அது பகைவர்களை மோதி முறியடிக்கும் நெஞ்சுரத்தை தருகிறது. உயிர் பிரியும் நேரத்தில் ஏகாதிபத்தியம் ஒழிக என்று நீ உச்சரித்த உன் உதடுகளை பார்க்கின்றோம். அது புரட்சியின் புதிய அத்தியாங்களை கற்றுத் தருகிறது.

உன் பாதையில் நடை போடுவது தான் இன்று எங்களுக்கு வரலாறும் விதித்திருக்கும் இயற்கையின் இயங்கியல் விதி. என் தோழனே உன்னைப் போல், நாங்களும் தோற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மகேந்திரன் பதிவு வெளியிட்டுள்ளார்.