மஞ்சள் வாழைப் பழத்தின் மீது சிவப்பு சாயம் பூசி செவ்வாழையாக மாற்றி விற்பனை! அதிர வைக்கும் மோசடி! உஷார் மக்களே!

மஞ்சள் வாழைப்பழத்திற்கு சாயம் பூசி செவ்வாழை என்று பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


உணவு பொருட்களில் நடைபெறும் மோசடி குறித்த விழிப்புணர்வு நம் சமுதாயத்தில் குறைவாகத்தான் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வாழைப்பழத்திற்கு கலர் பூசி அதை செவ்வாழை என்று பெயரிட்டு குறைந்த விலையில் மக்களுக்கு வியாபாரம் செய்யும் அவலநிலை நம் தமிழ் நாட்டில் நடைபெற்று வருகிறது என்று கூறினால் அதை உங்களால் நம்ப முடியுமா? 

இதை நம்புவது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும் நாம் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ரோட்டில் செவ்வாழைப்பழம் வெறும் ரூபாய்.6 என்று கூச்சலிட்டு கூவிக்கூவி ஒரு விற்பனையாளர் விற்றுக்கொண்டு இருந்திருக்கிறார். அதனை சாதாரண பொதுமக்களில் ஒருவர் செவ்வாழை என்று நம்பி தன் வீட்டிற்கு வாங்கி சென்றிருக்கிறார். அந்த பழத்தை பார்ப்பதற்கு அச்சு அசலாக சிறிய வகை செவ்வாழை போல் காட்சியளிக்கிறது. 

அவரும் அதைக் கொண்டுபோய் தன் வீட்டில் வைத்திருக்கிறார். அந்த நபருக்கு ஏதோ ஒரு சந்தேகம் மனதில் எழுந்துள்ளது. இதனால் அந்த செவ்வாழைப்பழத்தை பாத்திரம் தேய்க்கும் சோப்பு மற்றும் நாரைப் பயன்படுத்தி தேய்திருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. சிவப்பாக இருந்த வாழைப் பழத் தோல் அவர் சோப்பை பயன்படுத்தி தேய்த்தவுடன் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருந்தது . இதனை பார்த்த அந்த நபர் மிகவும் அதிர்ந்து போயிருக்கிறார்.

 மஞ்சள் வாழைப் பழத்தின் மீது சிவப்பு சாயம் பூசி செவ்வாழை என்று மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதற்காக இத்தகைய மோசடியை வியாபாரிகள் செய்திருக்கிறார்கள் என்று பின்பு தான் தெரிந்து இருக்கிறது. ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை எடுத்து அதனை செவ்வாழை என்றும் போலியாக விற்பனை செய்வதற்காக பல ரசாயனம் கலந்த சாயத்தை வாழைப்பழ தோலில் பூசி அதனை விற்பனையும் செய்து வருகின்றனர்.

இம்மாதிரியான செயல்கள் தொடர்ச்சியாக காய்கறிகளிலும் பழங்களிலும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. இந்த பழங்களை குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணும் பொழுது அவர்களுக்கு தினம்தோறும் அந்த ரசாயன பொருட்களின் வழியாக ஊறு விளைவிக்கும் விஷப் பொருட்கள் உடலுக்குள் செல்கின்றன. இவற்றின் மூலமாக தான் சிறு வயதிலேயே குழந்தைகள் புற்றுநோய் , ஆஸ்மா என பல கண்டறியப்படாத நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒருபுறம் மனிதர்களுக்கு ஆதாரமான காய்கறிகளும் கனிகளும் நஞ்சு ஆகிவிட்டன. மறுபுறம் நம்மையறியாமல் நம் வீட்டு சமையலறையில் நஞ்சு குடி புகுந்துவிட்டது. இதன் மூலம் வியாபாரிகள் திட்டமிட்டே நம் உடலில் நோயை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் நாமோ இதையெல்லாம் கவனிக்காமல் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு நமக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.