வசூல் வேட்டை! ரூ.35 கோடியுடன் திமுக முதலிடம்!

ஆண்டு தணிக்கை கணக்குகள் அடிப்படையில் கட்சிகளுக்கு வந்துள்ள வருமான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


2017 - 18ல், தி.மு.க., 35.74 கோடி ரூபாய் வசூலித்து, தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.

திமுக கட்சி தாக்கல் செய்துள்ள கணக்குகளில், வருவாய், 35.74 கோடி ரூபாய்; செலவு, 27 கோடி ரூபாய். இதில், கட்டணம், சந்தா வகையில், 22 கோடி ரூபாய்; வட்டி வருவாயாக, 11 கோடி ரூபாய்; நன்கொடை வகையில், 2 கோடி ரூபாய் கிடைத்ததாக, கணக்கு காட்டப்பட்டு உள்ளது. கடந்த, 2016 - 17ல், இக்கட்சியின் வருவாய், வெறும், 3.78 கோடி ரூபாய் மட்டுமே.

அதேநேரத்தில், 2017 -18ல், ஆளும் கட்சியான, அ.தி.மு.க., 12 கோடி ரூபாய் மட்டுமே, வருவாய் ஈட்டியுள்ளது. வட்டி வருவாயாக, 11 கோடி; கட்டணம், சந்தா வகையில், 1 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. செலவு, 10 கோடி ரூபாய். இந்த கட்சியின் வருவாய், 2016 - 17ல், 48 கோடி ரூபாயாக இருந்தது. பா.ம.க., - 1.17 கோடி ரூபாய்; தே.மு.தி.க., - 87 லட்சம் ரூபாய், வருவாய் ஈட்டியுள்ளன.