கல்யாணத்துக்கு முன்பு கர்ப்பம்! கட்டாய கருக்கலைப்பு! நடிகை யாஷிகா மரணத்தில் அடுத்த திடுக் தகவல்!

யாசிகாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது காதலனால் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.


சென்னை பெரவள்ளூர் பகுதியில் வசித்து வந்தவர் யாசிகா. இவர் மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 12ம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 

யாசியாகவின் தற்கொலைக்கு அவரது காதலன் அரவிந்த் தான் காரணம் என தெரியவந்த்தை அடுத்து நடிகையின் காதலன் அரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். யாசிகா கைப்பட எழுதிய டைரி மற்றும் செல்போன் பதிவுகள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அரவிந்தன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் யாசிகாவின் தாயார் எஸ்தர் பியூலா ராணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன்பின் செய்தியாளர் சந்தித்த அவர் கூறியதாவது, தனது மகள் தற்கொலை செய்யவில்லை. என் மகளை அரவிந்தான் கொலை செய்துள்ளார் மேலும்  போலீசார் கைபற்றி உள்ளதாக கூறப்படும் கடிதத்தில் இருப்பது எனது மகளின் கையெழுத்து இல்லை. 

மேலும் எனது மகள் தங்கி இருந்த வீட்டில் சுமார் 50 சவரன் தங்க நகை மாயமாகி உள்ளன. எனது மகளை அரவிந்த் அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நகைக்காக கொலை செய்திருக்கலாம். எனது மகளை கொலை செய்துவிட்டு, கொலை செய்வதற்கான அனைத்து தடையங்களையும் போலீசாரின் உதவியுடன் அரவிந்தன் அழித்துள்ளனர்.

அதன் பின்னர் எனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரவிந்தன் நாடகம் ஆடியுள்ளார். எனது மகளின் உடலை அவசர அவசரமாக நான் வந்து சேருவதற்கு முன்பாகவே அனைத்து இறுதி வேலைகளை செய்துள்ளனர். மேலும் என்னை கட்டாயப்படுத்தி யாசிகாவின் உடலை எரிப்பதற்கு அரவிந்தின் நண்பன் அஜித் என்பவன் கையெழுத்து வாங்கினான்.

எனவே கொலையில் அஜித்துக்கும் தொடர்பு உள்ளது. எனது மகள் அரவிந்தன் மூலமாக கர்ப்பமாக இருந்துள்ளாள். அவர் சாவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் கட்டாயமாக கருவை கலைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். எனக்கு நீதி வேண்டும். 

இவ்வாறு யாஷிகாவின் தாய் எஸ்தர் பியூலா ராணி தெரிவித்துள்ளார். நடிகையின் மரணம் தொடர்பாக அவரது தாயார் அளித்துள்ள பேட்டி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.