குடி..! கூத்து..! நள்ளிரவில் அதிவேகம்! யாஷிகா ஆனந்த் சென்ற காரால் ஏற்பட்ட கோர விபத்து! உயிருக்கு போராடும் இளைஞர்!

நடிகை யாஷிகா ஆனந்த் , சென்னையில் நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது உணவு டெலிவரி செய்யும் , பரத் என்ற வாலிபர் மீது அவர் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த டெலிவரி பாய் பரத் பலத்த காயங்களுடன் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் அங்கிருந்த கடை ஒன்று சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து ஏற்பட்டவுடன் யாஷிகா ஆனந்த் தன்னுடைய சொகுசு காரை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காரில் இருந்த அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவில் மதுபோதையில் மிக வேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அதிக வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.