திருமணம் செய்து கொள்ளாமல் தம்பி ராமையா மகனுடன் குடித்தனம்? அம்பலமாகும் பிக்பாஸ் நடிகையின் அந்தரங்கம்..!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா மகனுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். அதன் பின்பு துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் அதற்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். 

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் சமீபத்தில் வெளிவந்த ஜாம்பி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது இவன்தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் நெருக்கமாக உள்ளது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் உமாபதி ராமையாவும் living இல் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் அடிக்கடி வெளியாவதால் அவ்வாறு பேச படுவதாகவும் கூறப்படுகின்றது.

தம்பி ராமையா இயக்கத்தில் வெளிவந்த மணியார் குடும்பம் திரைப்படத்தில் அவரது மகன் உமாபதி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்று வெளியாகியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.