ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஆசையாக வாங்கிய யமஹா R15 பைக்! 20 நாளில் இளைஞருக்கு கிடைத்த விபரீத அனுபவம்!

கடைக்கு முன் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ள சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள செம்போடை என்னுமிடத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். 20 நாட்களுக்கு முன்னர் இப்போது ஆக யமஹா ரகத்தை சேர்ந்த "R15" இருசக்கர வாகனத்தை புதிதாக வாங்கினார். வண்டியை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு நேற்றிரவு கடையினுள் தூங்கியுள்ளார்.

காலையில் எழுந்து கடைக்கு வெளியே வந்தபோது முனியப்பனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசை ஆசையாக வாங்கிய இருசக்கரவாகனம் கடையின் முன் இல்லாமல் போனதே கண்டு முனியப்பன் மனமுடைந்தார். இருசக்கர வாகனம் திருடு போனதை தொடர்ந்து முனியப்பன் வேதாரணியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 திருடர்கள் முனியப்பனின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து வண்டியை திருட்டிட்டு போன வீடியோவானது பதிவாகியிருந்தது. வீடியோவில் காணப்பட்ட திருடர்களின் அடையாளத்தினை கொண்டு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது வேதாரண்யத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.