ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ திருவிழா!

கோவை ஈஷா யோகா மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழா இன்று (பிப்.18) கோலாகலமாக தொடங்கியது.


கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் திரு.கிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் திரு.சண்முகம் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

ஈஷாவின் 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 21-ம் தேதி மிக விமர்சையாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா இன்று மாலை தொடங்கியது.